நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்
👌 எப்பொழுதும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்
👌உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்
👌தினமும் ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
👌உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
👌உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்
👌சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்
👌உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். உணவு நம் கையில் படுவது மிகவும் நல்லது
🙏சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
👌தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், புத்தகம் வாசித்துக்கொண்டும், கைப்பேசியில்
யாருடனாவது பேசிக்கொண்டும் சாப்பிடக்கூடாது
👌சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உணவு உண்பது நல்லதல்ல
👌 தாய்மார்கள் குழந்தைகளுடன் இருந்து சாப்பிடக் கூடாது
👌உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
👌கை,கால்,முகத்தை நன்கு கழுவி விட்டு சாப்பிட வேண்டும்
👌குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
👌அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்
👌தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்
👌பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்
👌காலையில் பல் துலக்கு வேண்டும், இரவிலுல் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லது உகந்தது
👌இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது
👌தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்
👌படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்
👌உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்
👌காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்
👌டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்
👌நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது
👌தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது
👌கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்
👌எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்
👌ஆண்டிற்கு இருமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்
🌺🌺🌺👑👑👑
நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇⬇⬇⬇
Check this links for more interesting videos
Subscribe my YouTube Channels
http://youtube.com/c/DrAPOOVARASU
http://youtube.com/c/Flowerking
Dr Health உடல்நலம் :-(SUBSCRIBE)
https://www.youtube.com/channel/UCpipokhF0TG0zUr_LNtJ_sw
😃😃😃
“யாம் பெற்ற இன்பம்,
பெருக இவ்வையகமும்”
குறிப்பு:-
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்
🙏🙏🙏🙏🙏
கருத்துகள்