* சூரிய உதயத்துக்கு முன்பு (60 mins) எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு குளியுங்கள்.
குளிக்கும் நீரில் மஞ்சள், வேப்பிலை,கல் உப்பு சேர்க்கனும். எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
* தினமும் 2 முறை பல்விலக்கி ( பற்பொடி) oil Pulling செய்யனும்.
*தினமும் அரை மணி நேரம் வியர்வை வர மண்ணில் வேலை செய்வது முக்கியம். மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்காரம் நல்லது. மாலை நேரத்து சூரிய ஒளியில் இருப்பது நல்லது.
* வாரத்துக்கு 2 முறை எண்ணை குளியல் கட்டாயம் எடுக்கனும்.
* இரவில் நேத்ர ஜோதி தைலத்த வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது கண்களுக்கு இடனும். இரு காதுகளுக்கு சிறிது எண்ணை விடுவது அவசியம்ங்க. வருடத்தில் இரண்டு தடவை எனிமா எடுங்க.
* குளிர் சாதன உணவை கட்டாயம் தவிர்க்கனும். மூன்று வேளையும் சூடான உணவையே எடுக்கனும். தொண்டை பகுதி எப்போதும் கதகதப்பாக இருப்பது அவசியம்.
* வள்ளலாரின் மூக்கூட்டு சூரணத்த காய்ச்சி குடிங்க.
* பசுமஞ்சள், சின்ன வெங்காயம், பூண்டு,தோல் சீவிய தெளிந்த இஞ்சிச்சாறு,நெல்லி, எலுமிச்சை,இவை எல்லாவற்றையும் பச்சையாக எடுப்பது மிக மிகசிறப்புங்க. சிறிது தேன் கலந்தும் எடுக்கலாம். Vit - Cயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டுங்க.
*கருங்குருவை, கருப்புக் கவுனியில் கஞ்சி காய்ச்சி குடிப்பது நலம்.தூய மல்லி சாதம், முருங்கை, சுண்டை, பிரண்டை, வேப்பம் பூ, வாழைப்பூ சேர்க்கலாம்
* செக்கு எண்ணை,பனை கருப்பட்டி ,கரும்பு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது.வெள்ளை சர்க்கரையை, மைதாவை தவிர்ப்பது நல்லது. தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணை(அ) நல்லெண்ணை உள்ளுக்கு எடுப்பது நலம்.
* பசித்தால் மட்டுமே உணவை எடுக்கனும்,நீங்கள் எடுக்கும் உணவு கட்டாயம் இராசயனம் கொண்டு விளைந்தாக இருக்கவேகூடாது. பருவத்தில் பயிர் செய்த உணவே சிறந்த உணவு. அரிசி, பருப்பு,காய்கறிகள், கீரைகள், மூலிகைகள்...... முடிந்த வரை உங்கள் உணவை நீங்களே உற்பத்தி செய்யுங்க.
* தூய வெற்றிலை, களி பாக்கு, சூளை சுண்ணாம்பு சேர்த்து தினமும் தாம்பூலம் தரிப்பது நன்று.
* சூரிய மறைவுக்கு முன்பே இரவு உணவை முடித்தாகனும். தூங்கும் போது சூடு நீரில் காட்டன் துணியை விட்டு பிழித்து பாதத்தில்லிருந்து கால் மூட்டு வரை ஒத்தடம் தரலாம், நம் உடலில்லுள்ள வாயு, பித்தம்,கபத்தை சமநிலைப்படுத்தும்.
* மாலை நேரத்தில் இலுப்பெண்ணை கொண்டு தீபம் ஏற்றவும்.
* நிலம், நீர், காற்று மாசடைந்த இடத்தில் வாழ கூடாது.
பிடித்திருந்தால் பகிருங்கள்
நன்றி 🙏
************************
மேலும் பல சுவாரஸ்யமான பொதுஅறிவு,
உடல்நலம்,
ஆன்மீகம்,
தத்துவம்/வாழ்த்து,
WhatsApp,
தகவல்களுக்கு
www.Tnpsc2upsc.home.blog
www.tnpscoupsc.blogspot.com
www.drflowerking.blogspot.com
www.flowerking.info
***********************
For Medical and Dental topics
www.Medicopedias.in
கருத்துகள்